Published:Category:

அவசர நிலை பிரகடனம் செய்த கனேடிய மாகாணம்

#MIvDC

Listen to news

அவசர நிலை பிரகடனம் செய்த கனேடிய மாகாணம்

காட்டுத்தீ காரணமாக கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் செய்வதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

காட்டுத்தீயால் இதுவரை நோவா ஸ்கோடியா மாகாணத்தில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஹாலிஃபாக்ஸ் தீயணைப்பு துணைத் தலைவர் டேவிட் மெல்ட்ரம் வார இறுதியில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், எங்கள் தீயணைப்பு வீரர்கள் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் மிகவும் கடினமாக உழைத்தனர் என்று தெரிவித்துள்ளார்.

திங்களன்று Tantallon பகுதியில் காட்டுத்தீ தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் 14,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற கேட்டுக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ஞாயிறன்று இரவு முதல் ஹாலிஃபாக்ஸ் நகரில் அவசர நிலை அமுலில் உள்ளது. மேலும், எதிர்வரும் நாட்களில் மழைக்கும் வாய்ப்பு இல்லை என்பதால், நிலைமை மோசமடையவே வாய்ப்பு என குறிப்பிட்டுள்ளனர்.

Yarmouth பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளதாகவும் 6,270 ஹெக்டேர் நிலப்பரப்பில் தீ வியாபித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் இரண்டு ஹெலிகொப்டர்கள், 6 வான் நீர் தொட்டிகள் உட்பட அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

பொதுவாக மேற்கு கனடாவில் கோடையில் இதுபோன்ற காட்டுத்தீ வாடிக்கையே என்றே கூறுகின்றனர். ஆனால் நோவா ஸ்கோடியா மாகாணத்தை பொறுத்தமட்டில் மிக மிக அரிதாகவே இதுபோன்ற தீவிரமான காட்டுத்தீ ஏற்படும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

பேட்டி கொடுக்கவே அஞ்சும் நடிகை ஏன்?

#MIvDC

பேட்டி கொடுக்கவே அஞ்சும் நடிகை ஏன்?

Published:Category:

ஒருமணிநேர விளம்பரத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்கினாரா நயன்தாரா?

#MIvDC

ஒருமணிநேர விளம்பரத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்கினாரா நயன்தாரா?

Published:Category:

கண்ணாலே மிரட்டும் நயன்தாரா ஏன்?

#MIvDC

கண்ணாலே மிரட்டும் நயன்தாரா ஏன்?

Published:Category:

பிக்பாஸ் வீட்டிற்குள் அந்த பொண்ணா?

#MIvDC

பிக்பாஸ் வீட்டிற்குள் அந்த பொண்ணா?

Published:Category:

கனடா மீது இந்திய ஹாக்கர்கள் சைபர் தாக்குதல்?

#MIvDC

கனடா மீது இந்திய ஹாக்கர்கள் சைபர் தாக்குதல்?

Published:Category:

டிவி விவாத நிகழ்ச்சியில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட விருந்தினர்கள்!

#MIvDC

டிவி விவாத நிகழ்ச்சியில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட விருந்தினர்கள்!

Published:Category:

வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க்... அவசர நிலை பிரகடனம்!

#MIvDC

வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க்... அவசர நிலை பிரகடனம்!

Published:Category:

கஞ்சா செடியை மேய்ந்த ஆடுகள்... போதை தலைக்கேறி ஆட்டம்!

#MIvDC

கஞ்சா செடியை மேய்ந்த ஆடுகள்... போதை தலைக்கேறி ஆட்டம்!

Published:Category:

செந்தில் பாலாஜிக்கு அடுத்த செக்!

#MIvDC

செந்தில் பாலாஜிக்கு அடுத்த செக்!

Published:Category:

வயல்வேலை பெண்ணிடம் ஆணுறுப்பைக் காட்டிய முன்னாள் ராணுவ வீரர்!

#MIvDC

வயல்வேலை பெண்ணிடம் ஆணுறுப்பைக் காட்டிய முன்னாள் ராணுவ வீரர்!